/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கராத்தே 'பெல்ட்' போட்டி தேர்வு 72 சிறுவர் -- சிறுமியர் உற்சாகம்
/
கராத்தே 'பெல்ட்' போட்டி தேர்வு 72 சிறுவர் -- சிறுமியர் உற்சாகம்
கராத்தே 'பெல்ட்' போட்டி தேர்வு 72 சிறுவர் -- சிறுமியர் உற்சாகம்
கராத்தே 'பெல்ட்' போட்டி தேர்வு 72 சிறுவர் -- சிறுமியர் உற்சாகம்
ADDED : ஏப் 15, 2024 01:22 AM

சென்னை,:சென்னையில், 'சென்கோன் இஷின்-ரியு கராத்தே கொபுடோ' அமைப்பு சார்பில், 'பெல்ட்' போட்டி தேர்வுகள், மேடவாக்கத்தில் உள்ள அஜய் ஆட்ஸ் ஆப் வேர்ல்டு அகாடமி வளாகத்தில், நேற்று துவங்கியது.
அகாடமியில், கராத்தே பயிற்சி அந்தந்த பிரிவினருக்கு, ஓட்டம், கட்டா குமிட் உள்ளிட்ட பலவித தேர்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு தேர்வுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
முடிவில், தேர்வு செய்வோருக்கு தகுதியின் அடிப்படையில் நிறங்கள் வாயிலாக பெல்ட் வழங்கப்பட உள்ளன.
நேற்று துவங்கிய முதல் நாள் தேர்வில், 4 வயது முதல் 21 வயது வரையிலான, 72 பேருக்கு, அவரவர் பயிற்சி காலத்திற்கு ஏற்ப தேர்வுகள் நடக்கின்றன.
இதில், வெள்ளை பட்டைக்கு 18 பேரும்; மஞ்சள் பட்டைக்கு 13; பச்சைக்கு 11; பர்பிள் 17; பிரவுன் 12; கருப்பு ஒருவருக்கு என, வண்ண பட்டைக்கான தேர்வு தொடர்ந்து நடக்கிறது.