/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடிக்கம்பம், மேடை அமைக்க புதிய சாலைகளை பிளக்கும் கட்சிகள்
/
கொடிக்கம்பம், மேடை அமைக்க புதிய சாலைகளை பிளக்கும் கட்சிகள்
கொடிக்கம்பம், மேடை அமைக்க புதிய சாலைகளை பிளக்கும் கட்சிகள்
கொடிக்கம்பம், மேடை அமைக்க புதிய சாலைகளை பிளக்கும் கட்சிகள்
ADDED : ஏப் 03, 2024 12:07 AM
சென்னை,
தேர்தல் சம்பந்தமாக எந்த பிரசாரம் செய்தாலும், 48 மணி நேரத்திற்கு முன், அந்தந்த உதவி தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், சென்னையில் பல இடங்களில் முறையாக அனுமதி பெறாமல், பிரசாரம் செய்வதாக புகார் எழுகிறது.
இதில், 48 மணி நேரத்திற்கு பதில், 20, 12, 6 மணி நேரத்திற்கு முன், அனுமதி கேட்டு விண்ணப்பித்து பிரசாரத்தில் ஈடுபடுவதும் நடக்கிறது.
இதை கண்காணித்து, பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்ய, அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஒரு பகுதியில் பிரசாரம் நடப்பதாக இருந்தால், வேட்பாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை வரவேற்று, சாலையோரம் கொடிக்கம்பங்கள் நடப்படுகின்றன. இதற்காக, பள்ளம் தோண்டுவதால் சாலைகள் நாசமடைகின்றன.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்னையில் 100 கோடி ரூபாய்க்கு மேல், சாலை அமைக்க பூஜை போடப்பட்டது.
இதற்காக, பழைய சாலை சுரண்டப்பட்டு, புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய சாலையில், பள்ளம் எடுத்து கொடிக்கம்பங்கள் நடுவதால், சாலைகள் சேதமடைகின்றன.பல தெருக்கள், 15 முதல் 20 அடி அகலம் உடையவை.
இதில், வடிகால் பகுதியை தவிர்த்து, முழு பகுதியிலும் புதிய சாலை போடப்படுகிறது. இதில், கொடிக்கம்பங்கள் நடுவதால் சாலை நாசமடைகிறது.
இது தொடர்பாக, சென்னையில் 20க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அதேபோல், பொதுக்கூட்ட மேடை போடுவதாலும், சாலைகள் படுமோசமான நிலைக்கு மாறி உள்ளன.
புதிய சாலைகளை சேதமடையாமல் கண்காணிக்க வேண்டியது, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன் வரவேண்டும்.

