ADDED : ஏப் 27, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, பெரம்பூர், ராகவன் தெருவைச் சேர்ந்தவர் சகிலா, 49. அவரது தாய் சரோஜா என்பவருக்கு சொந்தமான நிலம், மணலி அருகே விச்சூரில் உள்ளது.
அந்த இடத்தை சிலர், போலி ஆவணம் வாயிலாக, அபகரித்து பாஸ்கர் என்பவருக்கு விற்றுள்ளனர். அதன் மதிப்பு, 90 லட்சம் ரூபாய். இதுகுறித்து, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின், நில மோசடி பிரிவு போலீசார் விசாரித்தனர்.
மணலி புதுநகரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ரவிச்சந்திரன், 53 என்பவரை, நேற்று காலை கைது செய்தனர்.

