/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துப்பாக்கி உரிமம் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
/
துப்பாக்கி உரிமம் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2025 12:23 AM

திருவொற்றியூர், வழக்கறிஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள்தொடர்வதால், தங்களுக்கு துப்பாக்கி உரிமம் தரக்கோரி, திருவொற்றியூர் வழக்கறிஞர்சங்கத்தினர் நேற்று காலை, திருெவாற்றியூர் நீதிமன்ற வாயில் முன், நுாதன போராட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர் சங்க தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
துப்பாக்கி உரிமம்வழங்க கோரி, தீபாவளி பிளாஸ்டிக் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, தொண்டர்சுப்பிரமணி கூறியதாவது:
வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இரு தினங்களுக்கு முன், சேலத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்டார்.
காஞ்சிபுரத்திலும் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடந்தது. எனவே, வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
மேலும், வழக்கறிஞர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் துப்பாக்கிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.