/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி வணிக வளாக கழிப்பறைகளுக்கு பூட்டு
/
மாநகராட்சி வணிக வளாக கழிப்பறைகளுக்கு பூட்டு
ADDED : பிப் 27, 2025 12:41 AM
திருவொற்றியூர்,
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, சென்னை மாநகராட்சியின் அம்பேத்கர் வணிக வளாகம் உள்ளது.
இங்கு, திருவெற்றியூர் தாசில்தார் அலுவலகம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி கமிஷனர் அலுவலகம், தனியார் வங்கி, ஏ.டி.எம்., தனியார் பல் மருத்துவமனை, ஜெராக்ஸ் கடை போன்றவை செயல்பட்டு வருகின்றன.
பொது சேவை நிறுவனங்கள், இந்த வளாகத்தில் செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும். அவர்களின் தேவைக்காக, வளாகத்தினுள் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
தவிர, தாசில்தார் அலுவலகம் அருகே இரு சிறுநீர் கழிப்பகங்கள், ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்டன.
இந்நிலையில், கழிப்பறைகளை பராமரித்து வரும் தனியார் ஒப்பந்த நிறுவனம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பூட்டு போட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், தாசில்தார் அலுவலகம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், கடும் அவதிக்கு ஆளாகிஉள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அம்பேத்கர் வணிக வளாகத்தில் பூட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

