/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
8ம் வகுப்பு படித்து மருத்துவம் மாதவரம் போலி டாக்டர் கைது
/
8ம் வகுப்பு படித்து மருத்துவம் மாதவரம் போலி டாக்டர் கைது
8ம் வகுப்பு படித்து மருத்துவம் மாதவரம் போலி டாக்டர் கைது
8ம் வகுப்பு படித்து மருத்துவம் மாதவரம் போலி டாக்டர் கைது
ADDED : செப் 02, 2024 02:01 AM

மாதவரம்:மாதவரம், பொன்னியம்மன்மேடு, கிருஷ்ணா நகர் முதல் தெருவில், என்.ஆர்.கே., என்ற பெயரில் மருத்துவமனை இயங்கி வந்தது. இதை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., பகுதியைச் சேர்ந்த மணிமாறன், 54, நடத்தி வந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வந்த அந்த மருத்துவமனை மீது, பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாதவரம் முதன்மை மருத்துவ அதிகாரி தனலட்சுமி,மணிமாறன் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சென்று அவருடைய சான்றிதழ் மற்றும் படிப்பு சம்பந்தமான விபரங்களை கேட்டுள்ளார்.
ஆனால், மணிமாறன் சரியான பதில் அளிக்கவில்லை. முன்னுக்குபின் முரணாக விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து, டி.எம்.எஸ்.,சில் உள்ள மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மணிமாறனிடம் அதிகாரிகள் கிடுக்கிப்படி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த மணிமாறன், சித்தா வைத்தியம் தெரிந்து வைத்து கொண்டு, அலோபதி மருத்துவம் பார்த்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து, அதிகாரிகள் அவரை மாதவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.