ADDED : செப் 18, 2024 12:26 AM
சென்னை,
விளையாட்டு வீரர்களின் காயங்களைக் கண்டறிவதற்காக, ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் உள்நாட்டு போர்ட்டபிள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனரை உருவாக்கியுள்ளனர். இது குறித்து ஐ.ஐ.டி., மெட்ராஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் விளையாட்டு வீரர்களின் காயம் கண்டறிதல் மற்றும் போகஸ் எனும் மேலாண்மைக்காக உள்நாட்டு போர்ட்டபிள் பாயின்ட்- ஆப் -கேர் -அல்ட்ராசவுண்ட் ஸ்கேனரை உருவாக்கி உள்ளனர்.
ஐ.ஐ.டி., மெட்ராஸில் உள்ள விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு மையத்தின் இந்த ஆராய்ச்சியானது, காயங்களை களத்தில் கண்டறியவும், காயத்தின் அளவை உடனடியாக மதிப்பீடு செய்யவும் உதவும். விளையாட்டு வீரர் தொடர்ந்து விளையாட முடியுமா என்பதை, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இந்த கருவி கண்டறியும்.
இந்தாண்டிற்குள் தயாரிப்பு முன்மாதிரி மேம்பாட்டை முடிக்க, ஆராய்ச்சியாளர்கள் இலக்கு வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, விளையாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து களத்தில் இருந்து, சோதனை தரவை சேகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

