/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ 'பார்க்கிங்' வசதிக்காக 10 ஏக்கருக்கு மேல் இடம் தேர்வு
/
மெட்ரோ 'பார்க்கிங்' வசதிக்காக 10 ஏக்கருக்கு மேல் இடம் தேர்வு
மெட்ரோ 'பார்க்கிங்' வசதிக்காக 10 ஏக்கருக்கு மேல் இடம் தேர்வு
மெட்ரோ 'பார்க்கிங்' வசதிக்காக 10 ஏக்கருக்கு மேல் இடம் தேர்வு
ADDED : செப் 06, 2024 12:47 AM
சென்னை, சென்னையில், ஆலந்துார், விமான நிலையம், சைதாப்பேட்டை, ஆயிரம்விளக்கு உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், காலை 10:00 மணிக்கே, 'பார்க்கிங் புல்' என அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக மாதவரம் - சிறுசேரி சிப்காட் 45 கி.மீ.,க்கும், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் 26.1 கி.மீ.,க்கும், மாதவரம் - சோழிங்கநல்லுார் 47 கி.மீ.,க்கும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் வாகனங்கள் நிறுத்துவதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க கூடுதலாக இடங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் தேர்வு செய்து வருகிறது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், சில மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்களில் உள்ள பிரச்னைக்கு, படிப்படியாக தீர்வு கண்டு வருகிறோம்.
அருகே இருக்கும் இடங்களை வாங்கி வருகிறோம். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் இடங்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில், கூடுதல் இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.
வரும் 2026ல், இரண்டாம் கட்ட திட்டத்தில் 116 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகளை முடித்து இயக்கும் போது, சென்னையில் எங்கும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.
அதனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் வாகன நிறுத்தம் இடங்களை தவிர, கூடுதல் இடங்களையும் அடையாளம் கண்டு, அவற்றை வாங்கி வருகிறோம்.
கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி பைபாஸ், சோழிங்கநல்லுார், சிறுசேரி, போரூர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களை தேர்வு செய்து, இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. தவிர, கூடுதலான இடங்களையும் மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு செய்து, தேர்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.