ADDED : ஆக 24, 2024 12:16 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ரெய்செல், 47. இவரது கணவர் இறந்து விட்டார். மகன் சியாம் சுந்தர், 19; தனியார் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்.
சியாம் சுந்தர் நேற்று கல்லுாரிக்கு செல்லவில்லை. வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவரது நண்பரான வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்த நிஷாந்த், நேற்று மாலை சியாம் சுந்தரின் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் ஹாலில் மின்விசிறியில் நைலான் புடவையால் சியாம் சுந்தர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், சியாம் சுந்தர் துாக்குமாட்டி இறந்ததற்கான எந்த தடயமும் இல்லை. அதேபோல கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாகவும், கழுத்தில் மட்டும் பவுடர் பூசப்பட்டும் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இருந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, கொலையா, தற்கொலையா என்பது தெரிய வரும்.

