/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோவில் பொருட்கள் தொலைந்தால் புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம்
/
மெட்ரோவில் பொருட்கள் தொலைந்தால் புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம்
மெட்ரோவில் பொருட்கள் தொலைந்தால் புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம்
மெட்ரோவில் பொருட்கள் தொலைந்தால் புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம்
ADDED : ஆக 14, 2024 12:21 AM
சென்னை,சென்னையில் இரு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரம் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில், பயணியருக்கான வசதி, கட்டண விபரங்கள், பயண அட்டை, பயணியர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உதவி எண்கள் உள்ளிட்ட விபரங்களை அறியலாம்.
மேலும், பயணியர் தங்களது உடைமைகளை தவற விட்டாலோ, திருடு போனாலோ புகார் தெரிவிக்கும் வசதியும், இதில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பயணியருக்கான கூடுதல் வசதியுடன், https://chennaimetrorail.org/ என்ற மெட்ரோ ரயில் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், பயணியர் தங்களது பொருட்களை தவற விட்டாலோ, திருடு போனாலோ, அந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம்.
வீட்டிற்கு சென்றபின் பொருள் தொலைந்தது தெரிந்தால், மேற்கண்ட இணையதளத்தில் பயணியருக்கான பகுதியில் புகார் தெரிவிக்கலாம். அதில், புகார் குறித்த விபரம், பயணியர் பெயர், மொபைல்போன் எண், முகவரி உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
இந்த புகாரை நிர்வாகம் எடுத்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.