/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2வது மாடியிலிருந்து விழுந்த ஒடிசா வாலிபர் உயிரிழப்பு
/
2வது மாடியிலிருந்து விழுந்த ஒடிசா வாலிபர் உயிரிழப்பு
2வது மாடியிலிருந்து விழுந்த ஒடிசா வாலிபர் உயிரிழப்பு
2வது மாடியிலிருந்து விழுந்த ஒடிசா வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஆக 20, 2024 12:17 AM
கீழ்ப்பாக்கம்,மது போதையில், மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சிங், 38; கட்டட தொழிலாளி. இவர், சென்னை கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரியன் கார்டன் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்திலேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதிகாலை, 12:30 மணியளவில், மது போதையில் இருந்த ராம்சிங், இரண்டாவது தளத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு, அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வந்து பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் ராம் சிங் மயங்கிக் கிடந்துள்ளார்.
அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு, அதிகாலை 4:30 மணியளவில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.