/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளத்தில் கவிழும் வாகனங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
பள்ளத்தில் கவிழும் வாகனங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பள்ளத்தில் கவிழும் வாகனங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பள்ளத்தில் கவிழும் வாகனங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : செப் 09, 2024 02:44 AM

செம்மஞ்சேரி:ஓ.எம்.ஆர்., குமரன்நகர் சந்திப்பில் இருந்து நுாக்கம்பாளையம் நோக்கி செல்லும் சாலை, 80 அடி அகலம் உடையது. மெட்ரோ ரயில் பணியால், இந்த சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், குமரன்நகர் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இப்பணி முடிந்து ஒரு மாதமாகியும், பள்ளத்தை மூடவில்லை.
சில இடங்களில் தவறாக பள்ளம் எடுத்ததால், ஒரு வழி சாலையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பள்ளமாக உள்ளது.
இந்த சாலையில், மெட்ரோ ரயில் பணிக்கான 35 டயர் கொண்ட லாரிகள், 10, 14 டயர் கொண்ட குடிநீர் லாரிகள் செல்கின்றன.
மேலும், இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, லாரிகள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பள்ளம் தோண்டிய போது, கேபிள் ஒயர் துண்டித்து தெருவிளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பாதசாரிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க, பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.