/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஒலிம்பியாட்' விளையாட்டு: 32 கல்லுாரிகள் பலப்பரீட்சை
/
'ஒலிம்பியாட்' விளையாட்டு: 32 கல்லுாரிகள் பலப்பரீட்சை
'ஒலிம்பியாட்' விளையாட்டு: 32 கல்லுாரிகள் பலப்பரீட்சை
'ஒலிம்பியாட்' விளையாட்டு: 32 கல்லுாரிகள் பலப்பரீட்சை
ADDED : பிப் 27, 2025 11:56 PM

சென்னை, அரும்பாக்கம், டி.ஜி. வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'ஒலிம்பியாட்' எனும் தலைப்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
இதில், வாலிபால் மற்றும் கூடைப்பந்து போட்டிகள், அரும்பாக்கம் கல்லுாரி வளாகத்திலும்; ஹாக்கி போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கிலும் நடக்கின்றன.
கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை துவங்கி போட்டியை, டி.ஜி. வைஷ்ணவா கல்லுாரி முதல்வர் சந்தோஷ்பாபு துவங்கி வைத்தார். வாலிபால் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில், இருபாலரிலும் தலா எட்டு அணிகள் என, 32 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், செயின்ட் ஜோசப் கல்லுாரி மற்றும் மதுரை கற்பகம் பல்கலை அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 2 - 1 என்ற செட் கணக்கில், செயின்ட் ஜோசப் அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், பனிமலர் கல்லுாரி, 2 - 0 என்ற செட் கணக்கில் நியூ கல்லுாரியை வீழ்த்தியது.
பெண்களுக்கான வாலிபாலில், எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி, 2 - 0 என்ற கணக்கில், செயின்ட் ஜோசப் கல்லுாரியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில், கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்., கல்லுாரி, 2 - 0 என்ற செட் கணக்கில், ராணி மேரி கல்லுாரியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கின்றன.