/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓபன் குத்துச்சண்டை 300 சிறுவர்கள் தகுதி
/
ஓபன் குத்துச்சண்டை 300 சிறுவர்கள் தகுதி
ADDED : ஜூன் 29, 2024 12:13 AM

சென்னை, தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் இணைந்து, மாநில ஓபன் குத்துச்சண்டை போட்டியை நேற்று முன்தினம் துவக்கின.
போட்டிகள், நேரு பூங்காவில் உள்ள எஸ்.டி.ஏ.டி., அரங்கில் நடக்கின்றன. சப் - ஜூனியர் 15 எடை பிரிவும், ஜூனியர், யூத் மற்றும் சீனியரில் தலா 13 எடை பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.
ஏழு முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான 'கப் பாக்சிங்' போட்டி முடிவில் நேற்று 96 சிறுவர்கள், நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். தவிர சப் - ஜூனியர், யூத், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில், மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

