/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வக்கீல்கள் சங்க தேர்தல் ஆகஸ்டில் நடத்த உத்தரவு
/
வக்கீல்கள் சங்க தேர்தல் ஆகஸ்டில் நடத்த உத்தரவு
ADDED : ஜூன் 28, 2024 12:34 AM
சென்னை, எழும்பூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலை, தமிழ்நாடு பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடத்தும்படி, கடந்த 2019 மே மாதம் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தொடர்ந்து இரண்டு முறை நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள், மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக இரு முறை பதவி வகித்த, எஸ்.சந்தன் பாபு மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
பதவிக் காலம் முடிந்த பின், நிர்வாகிகள் பதவியில் தொடர்வதை அனுமதிக்க முடியாது. எனவே, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையரை, பார் கவுன்சில் நியமிக்க வேண்டும். தேர்தல் அட்டவணையை, பார் கவுன்சில் வெளியிட வேண்டும். ஆகஸ்ட் 30க்குள் தேர்தல் நடவடிக்கையை முடிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

