/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பர்மா பஜார் இடைத்தரகர் இளையான்குடிக்கு கடத்தல்
/
பர்மா பஜார் இடைத்தரகர் இளையான்குடிக்கு கடத்தல்
ADDED : மே 04, 2024 12:03 AM
திருவல்லிக்கேணி, சென்னை, திருவல்லிக்கேணி, அசுதீன் கான் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது, 35; பர்மா பஜார் கடைகளுக்கு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கி தரும் இடைத்தரகர். இவரது நண்பர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் தமீம், 36.
சாகுல் அமீது வாயிலாக, பர்மா பஜார் வியாபாரிகளிடம் அறிமுகமான தமீம், வெளிநாடுகளில் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி, குருவியாக செயல்பட்டு வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார். இதற்காக வியாரிகளிடம், 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்து, பின் மாயமாகிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பர்மா பஜார் வியாபாரிகள் இப்ராஹீம், ரிஸ்வான், ரமீஸ்ராஜா, நவாஸ்கான் ஆகியோர், மார்ச் 11ல், சாகுல் அமீது வீட்டுக்கு சென்றனர். கொடுத்த பணத்தையும், தமீமையும் குறித்து கேட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து, சாகுல் அமீது மனைவி புகாரில், திருவல்லிக்கேணி போலீசார் இப்ராஹீம், ரிஸ்வான் உள்ளிட்ட நான்கு பேரை அழைத்து, எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, இப்ராஹீம் தரப்பினர், திருவல்லிக்கேணி பகுதியில் நடந்து சென்ற சாகுல் அமீதுவை கடத்திக்கொண்டு, இளையான்குடிக்கு சென்றதாக தெரிகிறது.
இது குறித்து அறிந்த திருவல்லிக்கேணி போலீசார், சாகுல் அமீது மற்றும் தமீம் ஆகியோரை தேடியும், இப்ராஹீம் தரப்பினரை கைது செய்யவும், இளையான்குடிக்கு நேற்று விரைந்துள்ளனர்.