/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாக்கில் தொங்கிய மர்ம நபர் போலீஸ் விசாரணை
/
துாக்கில் தொங்கிய மர்ம நபர் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 29, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளை, புளியந்தோப்பு சால்ட் கோட்ரஸ் உள்ளே நேற்று மதியம் 12:00 மணியளவில் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பேசின்பாலம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
இறந்தவரின் ஆடைகளை சோதனை செய்த போது, தாம்பரம் மேற்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை பயணம் செய்ததற்கான மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் பேருந்து டிக்கெட் இருந்தது. இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

