ADDED : மே 08, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,தமிழக மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு, எலுமிச்சை பழங்கள் வரத்து உள்ளது.
கோடை காரண மாக தேவை அதிகரித் ததால், மொத்த வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜன்டுகள், எலுமிச்சை பழங்களின் விலையை தாறுமாக உயர்த்தியுள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எலுமிச்சைப் பழம், தற்போது 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லரை விற்பனை கடைகளில் 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

