ADDED : பிப் 27, 2025 12:45 AM

அசோக் நகர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உடைந்த மழைநீர் வடிகால் பள்ளத்தை சீர் செய்யும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கோடம்பாக்கம் மண்டலம், 135வது வார்டு அசோக் நகரில், 11வது அவென்யூ சாலை உள்ளது. இச்சாலை கே.கே., நகர், அசோக் நகர், மேற்கு சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலை.
கடந்த மழைக்காலத்தில், இச்சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. தண்ணீர் வடியவைக்க, வடிகாலின் ஒருபகுதி உடைக்கப்பட்டதால், அப்பகுதி பள்ளமாக மாறி உள்ளது.
அருகே உள்ள தள்ளு வண்டி கடைகளில் இருந்து கழிவுகள் அனைத்தும், இந்த மழைநீர் வடிகாலில் விடப்பட்டது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர் கேடு நிலவி வந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், மழைநீர் வடிகாலை நேற்று சீரமைத்தனர்.