/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமித்து மூடிய நடைபாதை திறக்கப்பட்டதால் நிம்மதி
/
ஆக்கிரமித்து மூடிய நடைபாதை திறக்கப்பட்டதால் நிம்மதி
ஆக்கிரமித்து மூடிய நடைபாதை திறக்கப்பட்டதால் நிம்மதி
ஆக்கிரமித்து மூடிய நடைபாதை திறக்கப்பட்டதால் நிம்மதி
ADDED : செப் 11, 2024 12:37 AM

வேளச்சேரி, வேளச்சேரி விரைவு சாலை, 200 அடி அகலம் கொண்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலை ஓரம், வேளச்சேரி ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும், 15 அடி அகல கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடு கால்வாயாக மாற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
கால்வாயை ஒட்டி, சிக்னல் அருகிலுள்ள சாலை பகுதியில், கழிவுநீரேற்று நிலையம் உள்ளது.
இதன் மேற்கு திசையில், மூடு கால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டது.
இதை சிலர் ஆக்கிரமித்து, தகரம் கொண்டு பாதையை அடைத்து வைத்தனர். இதனால், நடைபயிற்சி செல்வோர் கழிவுநீரேற்று நிலையத்தைச் சுற்றி சாலையில் நடக்க வேண்டியதுடன், வாகன விபத்திலும் சிக்கினர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஆக்கிரமித்து அடைத்து வைத்த தகரத்தை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
இனிமேல் அடைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்தனர். இதனால், பாதசாரிகள் நிம்மதியாக நடைபாதையில் நடக்கின்றனர்.