/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவத்தில் கொட்டிய கட்டட இடிபாடு வரும் 30க்குள் அகற்ற கெடு
/
கூவத்தில் கொட்டிய கட்டட இடிபாடு வரும் 30க்குள் அகற்ற கெடு
கூவத்தில் கொட்டிய கட்டட இடிபாடு வரும் 30க்குள் அகற்ற கெடு
கூவத்தில் கொட்டிய கட்டட இடிபாடு வரும் 30க்குள் அகற்ற கெடு
ADDED : செப் 06, 2024 12:42 AM
சென்னை,
கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளை, வரும் 30ம் தேதிக்குள் அகற்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கும் கூவம் ஆறு, 72 கி.மீ., பயணித்து சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.
இந்த ஆற்றின் கரை வழியாக, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, ஜெ.குமார் என்ற மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம், இப்பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
தற்போது, இந்நிறுவனம் வாயிலாக பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதில், கூவத்தில் துாண்கள் அமைக்க சிந்தாதிரிப்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில், ஆற்றின் நீரோட்டம் உள்ள பகுதிகள் மற்றும் கரையில், பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியை மேற்கொள்ள, துளையிடும் இயந்திரத்தை கூவம் ஆற்றுக்குள் கொண்டு செல்ல, ஆற்றில் நீரோட்டம் உள்ள பகுதியில் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டு உள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் இந்த கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அக்டோபரில் வட கிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், வரும் 30ம் தேதிக்குள் கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும் என, ஒப்பந்த நிறுவனத்திற்கு நீர்வளத்துறை வாயிலாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தாமல், நீரோட்டத்தை பாதிக்காத வகையில் கரையோரத்தில் குவித்து வைக்க அனுமதி பெறும் முயற்சியில், மேம்பாலம் கட்டும் ஒப்பந்தம் நிறுவனம் இறங்கியுள்ளது.
மழை ஓய்ந்த பிறகு, ஜன., மாதத்திற்குப் பிறகு மீண்டும் பணிகளை துவங்க வசதியாக, ஒப்பந்த நிறுவனம் சார்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.