/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா போதையில் தகராறு இளைஞருக்கு 'காப்பு'
/
கஞ்சா போதையில் தகராறு இளைஞருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 28, 2024 12:31 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில், கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம், இளைஞர்கள் இருவர் கஞ்சா போதையில், பள்ளி மாணவியரை மடக்கி பேசியுள்ளனர்.
இதை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காஞ்சா போதை இளைஞர்கள், அந்த நபரின் வீட்டின் முன் கூடி, மிரட்டி ரகளை செய்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, ஒரு இளைஞர் தப்பியோடிய நிலையில், மற்றொரு இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த அருண்,19, என தெரிந்தது. இவருடன் வந்த இளைஞர் குறித்தும், இவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.

