/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலாற்றில் வாலிபர் உடல் புதைந்த நிலையில் மீட்பு
/
பாலாற்றில் வாலிபர் உடல் புதைந்த நிலையில் மீட்பு
ADDED : ஜூலை 12, 2024 12:36 AM
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம், அய்யம்பேட்டை நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர், தனுஷ் 21. கடந்த 6ம் தேதி, இரவு 7:00 மணிக்கு கடைத்தெருவுக்கு சென்று வருவதாக கூறி, வீட்டில் இருந்து புறப்பட்ட தனுஷ் மீண்டும் திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை, ஏகனாம்பேட்டை அடுத்த, கோயம்பாக்கம் பாலாற்றங்கரையையொட்டிய ஆற்று மண்ணில் ஆண் ஒருவரது கால் மட்டும் வெளியே தெரியும்படி புதைந்த நிலையில் இருப்பதை அப்பகுதியினர் கண்டனர். வாலாஜாபாத் போலீசார் அப்பகுதிக்கு வந்து, பாலாற்றில் புதைந்திருந்த ஆண் சடலத்தை மீட்டெடுத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அய்யம்பேட்டை தனுஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

