/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சாம்சங்' ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
'சாம்சங்' ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் 'சாம்சங்' தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு, 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், சம்பள உயர்வு, எட்டு மணி நேர பணி, சி.ஐ.டி.யு., எனும் இந்திய தொழிற்சங்க மையத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட, எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர்.
சுங்குவார்சத்திரம் -- வாலாஜாபாத் சாலையில் எச்சூர் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.