/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
/
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
ADDED : பிப் 27, 2025 12:43 AM
தண்டையார்பேட்டை, பவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் பாட்டியின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 6ம் தேதி பாட்டியிடம் கோபித்து, வண்ணாரப்பேட்டை, பாரத் திரையரங்கம் அருகே நின்றுள்ளார்.
அப்போது, படம் பார்த்துவிட்டு வந்த பிரவீன், 32, விஜயகுமார், 52, ஆகியோர், சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின், சிறுமி வீட்டை விட்டு வந்ததையறிந்து, பிரவீன் பாதுகாப்பு தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
இதை நம்பி சிறுமி, பிரவீன், விஜயகுமார் ஆகியோருடன் பெருங்குடிக்கு சென்றுள்ளார். அங்கு, பிரவீன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேநேரம், சமீபத்தில் சிறுமி பாட்டியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.
பின், அந்த மொபைல் போன் எண்ணை வைத்து, பெருங்குடியில் பதுக்கி இருந்தவர்களை, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த பிரவீன், 32, மீது, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். பிரவீனுக்கு உடந்தையாக இருந்த கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்த விஜயகுமார், 52, என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

