/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி - மவுன்ட் உள்வட்ட சாலையில் சிக்னல் அமைப்பு
/
வேளச்சேரி - மவுன்ட் உள்வட்ட சாலையில் சிக்னல் அமைப்பு
வேளச்சேரி - மவுன்ட் உள்வட்ட சாலையில் சிக்னல் அமைப்பு
வேளச்சேரி - மவுன்ட் உள்வட்ட சாலையில் சிக்னல் அமைப்பு
ADDED : மார் 29, 2024 12:23 AM

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ள கரம், -புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளை வேளச்சேரி- - மவுன்ட் உள்வட்டச்சாலை இணைக்கிறது. தினமும் பள்ளி மாணவ - மாணவியர் நுாற்றுக்கணக்கானோர் உள்வட்ட சாலையை கடந்து செல்ல வேண்டும்.
இதற்கான பிரதான வழித்தடமாக ஆதம்பாக்கம், நேரு தெரு அமைந்துள்ளது. அத்தெரு சாலையில் இருந்து உள்வட்ட சாலையை பீக் ஹவர்சில் கடந்து செல்லும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட கால பிரச்னை
குறிப்பிட்ட இடத்தில் சிக்னல் இல்லாததால், கடந்து செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் ஆகியது. எனவே, பள்ளிக்கு முன்கூட்டியே புறப்பட வேண்டிய கட்டாயத்தில் மாணவ - மாணவியர் தவித்தனர். இப்பிரச்னை நீண்ட காலமாக தொடர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து போலீசார் இப்பிரச்னைக்கு தீர்வாக நேரு தெருவில் இருந்து உள்வட்ட சாலை கடக்கும் பகுதி முழுதும் அடைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்தனர்.
நேரு தெருவில் இருந்து உள்வட்ட சாலையில் பயணித்து, புழுதிவாக்கம், பாலாஜி நகர் மெயின்ரோடு அருகில் 'யு டர்ன்' செய்யவும், அதேபோல, உள்ளகரத்தில் இருந்து ஆதம்பாக்கம் செல்வோர் திருமலை நாயக்கர் சாலை அருகே உள்ள உள்வட்ட சாலையில் ' யு -டர்ன்' செய்யும் வகையில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும், மாணவ - மாணவியரை அழைத்து செல்லும் பெற்றோர் வசதிக்காக, நேரு தெருவில் இருந்து உள்வட்ட சாலையை இருசக்கர வாகனங்கள் மட்டும் கடக்கவும் வழித்தடம் அமைக்கப்பட்டது.
சில மாதங்களில் இந்த திட்டம் கைவிடப்பட்டதால், மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். எனவே, சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என நமது நாளிதழ் படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.
சோதனை ஓட்டம்
அதன் நடவடிக்கையாக சமீபத்தில் சிக்னல் அமைக்கும் பணி துவக்கி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, மின் இணைப்பு வழங்கி சிக்னல் சேவைகள் சோதனை மேற்கொள்ளும் பணி நடந்து வருகிறது.
மேலும், நேரு தெரு முனைப்பகுதி இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் உள்ள வேகத்தடை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் சிக்னல் முழுமையாக இயக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

