ADDED : ஆக 18, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பவுர்ணமியை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 130 பஸ்களும், நாளை 250 சிறப்பு பஸ்களும், கோயம்பேடில் இருந்து இன்று 30 பஸ்களும், மாதவரத்திலிருந்து நாளை 40 பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும்.
இவை தவிர கிளாம்பாக்கத்தில் இருந்து இருக்கை, படுக்கை வசதி கொண்ட 50 'ஏசி' பஸ்களும் நாளை இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.