/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர், பாதாள சாக்கடை இல்லாமல் 4 ஆண்டாக நெமிலிச்சேரியில் தவிப்பு
/
குடிநீர், பாதாள சாக்கடை இல்லாமல் 4 ஆண்டாக நெமிலிச்சேரியில் தவிப்பு
குடிநீர், பாதாள சாக்கடை இல்லாமல் 4 ஆண்டாக நெமிலிச்சேரியில் தவிப்பு
குடிநீர், பாதாள சாக்கடை இல்லாமல் 4 ஆண்டாக நெமிலிச்சேரியில் தவிப்பு
ADDED : ஜூலை 12, 2024 12:24 AM
குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், 22வது வார்டு, குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பாலசுப்பிரமணியம் விரிவில், 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு வசிப்போர் கூறியதாவது:
பாலசுப்பிரமணியம் விரிவு பகுதியில், 2021ல் வீடு கட்ட துவங்கினோம். தற்போது, 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சியில் முறையாக கட்டட அனுமதி பெற்று தான் கட்டியுள்ளோம். அதேபோல், அனுமதி வாங்கும் போது, பாதாள சாக்கடை, குடிநீருக்கு பணம் கட்டியுள்ளோம்.
ஆனால், இதுவரை இப்பகுதியில், குடிநீர் இணைப்போ, பாதாள சாக்கடை இணைப்போ வழங்கப்படவில்லை. இதனால், கேன் தண்ணீர், ஆர்.ஓ., வாட்டர் பயன்படுத்தி வருகிறோம்.
பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், மாதம் ஒரு முறை, கழிவுநீர் லாரிக்காக, 2,000 ரூபாய் செலவு செய்கிறோம்.
இது தொடர்பாக, 2021ல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம்.
இப்பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், இன்றுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை.
முறையான அனுமதி பெற்று, வீட்டு வரி செலுத்தி வரும் இப்பகுதிக்கு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.