/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை, சாலையை மீட்பதில் மாநகராட்சி தீவிரம் மதுரவாயல், குன்றத்துார், ஆவடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ADDED : ஆக 29, 2024 12:24 AM

மதுரவாயல், மழைக்காலத்தில் கூவம் ஆற்றில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க மதுரவாயல் அருகே 31.65 கோடி ரூபாய் மதிப்பில், நொளம்பூர் யூனியன் சாலை,- சன்னிதி முதல் குறுக்கு தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்க தரைப்பாலம் அமைக்க முடிவானது.
அதேபோல், 42.71 கோடி ரூபாய் மதிப்பில், சின்ன நொளம்பூர் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலும், பாலம் கட்டப்பட உள்ளது.
நொளம்பூர் யூனியன் சாலை மற்றும் சன்னதி முதல் குறுக்கு தெரு வழியாக அமையும் பாலப் பணிக்கு இடையூறாக இருந்த 8 வீடுகளை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
இவற்றில் வசித்த 23 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குன்றத்துார் முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து வீடுகளும், வணிக கடைகளின் முன்புறம் வளர்த்தும் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனால், இந்த சாலை குறுகலாகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, காஞ்சி புரம் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், 'பொக்லைன்' வாயிலாக முதற்கட்டமாக, ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் என, 20 கட்டடங்களை இடித்து அகற்றினர்.
ஆவடி அரசு மருத்துவமனை மற்றும் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள புதிய ராணுவ சாலையில், இருபுறமும் உள்ள நடைபாதையை, நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்தனர்.
இதையடுத்து, 50 கடையின் விளம்பர பதாகை, தற்காலிக கூரை மற்றும் இதர ஆக்கிரமிப்புகளை, நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.