/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடலில் தத்தளித்த மாணவரை காப்பாற்றிய மீனவர் பரிதாப பலி
/
கடலில் தத்தளித்த மாணவரை காப்பாற்றிய மீனவர் பரிதாப பலி
கடலில் தத்தளித்த மாணவரை காப்பாற்றிய மீனவர் பரிதாப பலி
கடலில் தத்தளித்த மாணவரை காப்பாற்றிய மீனவர் பரிதாப பலி
ADDED : மே 04, 2024 12:09 AM

திருவொற்றியூர்,திருவொற்றியூர், கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ், 20; மீஞ்சூர் தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இவர், நேற்று மாலை, தனது நண்பரான கல்யாணி செட்டித் தெருவைச் சேர்ந்த ஆனந்த், 26, என்பவருடன், ஒண்டிக்குப்பம் கடற்கரையில் குளிக்கச் சென்றார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, சந்தோஷ் தத்தளித்தார்.
இதை பார்த்த பெண்கள் சிலர், மீனவர்களை உதவிக்கு அழைத்து உள்ளனர். அதன்படி, ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் முரளி, மோகன், பார்த்திபன் ஆகியோர், மாணவரை கடலில் இறங்கி காப்பாற்ற சென்றனர்.
அவர்களும் கடலில் தத்தளிக்கவே, ரமேஷ், குணசேகரன் ஆகியோர் கட்டுமரத்தை எடுத்து சென்று, மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில், கல்லுாரி மாணவரை காப்பாற்றிய மீனவர் முரளி, 49, கடல் அலையில் சிக்கி மூச்சு திணறினார். அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.