/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து அண்டா, குண்டா திருடிய கும்பல் கைது
/
வீடு புகுந்து அண்டா, குண்டா திருடிய கும்பல் கைது
ADDED : ஆக 13, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர்,கண்ணகிநகரை சேர்ந்தவர் சரண்யா, 33. நேற்றுமுன்தினம் இரவு, குடும்பத்தினருடன் காற்றோட்ட வசதிக்காக கதவை திறந்து வைத்து வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து பார்த்தபோது, ஒரு எவர்சில்வர் குண்டா, இரண்டு பித்தளை அண்டாக்கள், ஒரு மொபைல் போன் ஆகியவற்றை காணோம்.
புகாரின் படி, கண்ணகிநகர் போலீசார் விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த தனுஷ், 19, நரேஷ், 19 ஆகியோர் வீடு புகுந்து திருடியது தெரிந்தது. நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து அண்டா, குண்டா, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.