ADDED : ஆக 29, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்,
மேற்கு வங்கம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சான்டர், 27; கட்டட சென்ட்ரிங் தொழிலாளி.
நேற்று முன்தினம் மாலை, கிழக்கு தாம்பரம் சந்திரன் நகரில் உள்ள ஏரிக்கு சென்றார். அங்கு, போதையில் இருந்த நான்கு பேர், சான்டரை வழிமறித்து, பீர்பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர்.
அவரது மொபைல் போன் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்தனர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் மயக்கமடைந்த சான்டர், இரவு 9:00 மணிக்கு மேல் எழுந்து, ரத்த வெள்ளத்துடன் வேலை செய்யும் இடத்திற்கு சென்றார்.
அங்கிருந்தவர்கள் அவரை, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

