/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'லிப்ட்' கொடுத்தவரிடம் நகை பறிக்க முயன்றோர் கைது
/
'லிப்ட்' கொடுத்தவரிடம் நகை பறிக்க முயன்றோர் கைது
ADDED : மார் 25, 2024 12:47 AM
மாதவரம்:மாதவரம், பொன்னியம்மன்மேடு சீனிவாசா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52; போட்டோகிராபர்.
இவர் நேற்று முன்தினம் இரவு, தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், மாதவரம் ஜி.என்.டி., சாலை வழியாக வீட்டிற்குச் சென்றார்.
அப்போது, புனித அன்னாள் மகளிர் கல்லுாரி அருகே, அவரிடம் இருவர், 'லிப்ட்' கேட்டுள்ளனர்.
அவர்களை ஏற்றி சிறிது துாரம் சென்றதும், அவரை ஒருவன் பிடித்துக்கொள்ள, மற்றொருவன் அவரது செயினை பறிக்க முயன்றான்.
சுதாரித்த ரவிச்சந்திரன், அருகிலுள்ள, 'ஷெல்' பெட்ரோல் 'பங்க்'கில் வாகனத்தை நிறுத்தி, அங்கிருந்தோரை உதவிக்கு அழைத்தார். அதற்குள் இருவரும் இறங்கி தப்பி ஓடினர். உடனே, தன் மகன் அவினாஷ் என்பவருக்கு ரவிச்சந்திரன் தகவல் அளித்தார். தன் நண்பருடன் சென்ற அவினாஷ், மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே, மேற்கண்ட இருவரையும் பிடித்து, மாதவரம் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் செயின் பறிக்க முயன்றது, புளியந்தோப்பைச் சேர்ந்த ஆசிப், 23, கொடுங்கையூரைச் சேர்ந்த, 14 வயது சிறுவன் என தெரிந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

