/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காய்கறி வியாபாரியை மிரட்டி வழிப்பறி செய்த மூவர் கைது
/
காய்கறி வியாபாரியை மிரட்டி வழிப்பறி செய்த மூவர் கைது
காய்கறி வியாபாரியை மிரட்டி வழிப்பறி செய்த மூவர் கைது
காய்கறி வியாபாரியை மிரட்டி வழிப்பறி செய்த மூவர் கைது
ADDED : மார் 01, 2025 01:22 AM

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், பெரியார் நகர், நேதாஜி சாலையை சேர்ந்தவர் பிரபாகர், 31; காய்கறி வியாபாரி. கக்கன் நகர் பகுதிகளில், டிரை சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்தபோது, அங்கே வந்த மூவர், பிரபாகரிடம் மாமூல் கேட்டனர்.
பிரபாகர் மாமூல் தர மறுத்ததால், கத்திமுனையில் மிரட்டி, அவரிடம் இருந்த, 1,200 ரூபாயை பறித்துக்கொண்டு, காய்கறிகளை சாலையில் கொட்டி நாசம் செய்து சென்றனர்.
இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், வழிப்பறி செய்தது, உள்ளகரம், ஏரிக்கரையை சேர்ந்த பிரபுதேவா, 28, ஆதம்பாக்கம், சாஸ்திரி நகரை சேர்ந்த பிரவீன்குமார், 24, கக்கன் நகரை சேர்ந்த அஜித்குமார், 29, என்பது தெரிந்தது.
இதில், பிரபுதேவா மடிப்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது, ஏற்கனவே கொலை, கஞ்சா உட்பட ஏழு குற்ற வழக்குகள் உள்ளன.
பிரவீன்குமார் மீது 2 திருட்டு வழக்குகளும், அஜித்குமார் மீது திருட்டு உட்பட 2 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. பின், மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.