/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெர்மாகோல் கழிவுகளால் மீன்கள் பாதிப்பு மாற்று வழி கண்டறிய தீர்ப்பாயம் உத்தரவு மாற்று வழி கண்டறிய தீர்ப்பாயம் உத்தரவு

ADDED : செப் 10, 2024 12:48 AM
சென்னை சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை, ஜாம்பஜார், பட்டாளம், காவாங்கரை, வானகரம் உள்ளிட்ட பெரிய மீன் மார்க்கெட்கள், கூவம் நதிக்கரை ஓரம் அமைந்துள்ளன. இங்கு மீன்களை தெர்மாகோல் பெட்டிகளில் அடைத்து எடுத்து வருகின்றனர்.
மீன் விற்பனை முடிந்த பின், தெர்மாகோல் பெட்டிகளை உடைத்து, கூவம் நதிக்கரையில் வீசுகின்றனர். இறுதியில் அவை கடலில் கலக்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கடற்கரை சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பிப்ரவரி 5ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டியது, மீன்பிடி துறைமுக மேலாண்மைக் குழுவின் பொறுப்பு. தகுந்த இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி, கழிவுகளை அகற்றி, தெர்மாகோல் கழிவுகளை கடலில் கலக்காமல் தடுக்க, சென்னை மாநகராட்சி நடவடிக்க எடுக்க வேண்டும்.
குப்பையை எவ்வாறு குறைப்பது என்பது பற்றியும், தெர்மாகோலுக்கு மாற்று என்ன என்பதையும் காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு, சென்னை மாநகராட்சி, தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.
இது தொடர்பாக மீன்வளத் துறை செயலர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 24ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.