/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தார்ப்பாய் போர்த்தாத லாரிகள் குன்றத்துாரில் விபத்து அபாயம்
/
தார்ப்பாய் போர்த்தாத லாரிகள் குன்றத்துாரில் விபத்து அபாயம்
தார்ப்பாய் போர்த்தாத லாரிகள் குன்றத்துாரில் விபத்து அபாயம்
தார்ப்பாய் போர்த்தாத லாரிகள் குன்றத்துாரில் விபத்து அபாயம்
ADDED : ஏப் 27, 2024 12:22 AM

குன்றத்துார்,  தார்ப்பாய் போர்த்தாமல் அதிக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகளால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
குன்றத்துார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் அதிகம் நடக்கின்றன.
இங்கு கட்டுமான பணிக்கு தேவையான ஜல்லி, மண், கற்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், தார்ப்பாய் போர்த்தாமல் அதிவேகமாக செல்கின்றன.
இதனால், லாரிகளில் இருந்து சிதறும் கற்கள், மண் சாலையில் விழுகின்றன. லாரியின் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் கண்ணில் இந்த கற்கள் படுவதால், அவர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, தார்ப்பாய் போர்த்தாமல் அதிக சுமை ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.