/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரியவகை உயிரினங்கள் பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
/
அரியவகை உயிரினங்கள் பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
அரியவகை உயிரினங்கள் பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
அரியவகை உயிரினங்கள் பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : மார் 13, 2025 12:35 AM

சென்னை, மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, விமானத்தில் அரியவகை உயிரினங்களை கடத்தி வந்த இருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில், இம்மாதம் 7 ம் தேதி, மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணியரை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பெரிய லக்கேஜ்கள், பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்த இருவரை மடக்கி சோதனை செய்தனர்.
அவற்றில், அரிய வகை குரங்கு, ஆசிய மரநாய் உள்ளிட்ட, எட்டு வகையான அரிய உயிரினங்கள் இருந்தன.
இதுகுறித்து, மத்திய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதித்து பார்த்தில், மூன்று உயிரினங்கள் விமானத்திலேயே மூச்சுத்திணறி இறந்தது தெரிய வந்தது.
இவை அனைத்தும் இந்தோனேசியாவின் சுமத்திரா, ஜாவா தீவுகளில் வசிப்பவை. மிகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் உள்ளவை என்பது தெரிய வந்தது. உயிருடன் இருந்த உயிரினங்கள், மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இதையடுத்து, சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று, கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
***