/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜய் பங்கேற்ற நோன்பு நிகழ்ச்சியில் இருவரிடம் ரூ. 1 லட்சம் ஆட்டை
/
விஜய் பங்கேற்ற நோன்பு நிகழ்ச்சியில் இருவரிடம் ரூ. 1 லட்சம் ஆட்டை
விஜய் பங்கேற்ற நோன்பு நிகழ்ச்சியில் இருவரிடம் ரூ. 1 லட்சம் ஆட்டை
விஜய் பங்கேற்ற நோன்பு நிகழ்ச்சியில் இருவரிடம் ரூ. 1 லட்சம் ஆட்டை
ADDED : மார் 09, 2025 01:30 AM
சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.,மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அழைப்பு கிடைத்தவர்கள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி மண்ணடியைச் சேர்ந்த அப்துல் அபுதாகிர், 35 என்பவரிடம், 61,500 ரூபாயும், பெரம்பூரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரிடம் , 40,000 ரூபாயும் பிட் பாக்கெட் அடித்துள்ளனர். இருவரும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பவழக்கு பதிவு செய்த அண்ணாசாலை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரே நபர் இருவரிடமும் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவரை கைது செய்யும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
****