/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு
/
ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு
ADDED : செப் 10, 2024 12:31 AM
ஆவடி, ஆவடி, மோரை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி, 54; காவலாளி. இவருக்கு, மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர், நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக ஆவடி ரயில் நிலையம் வந்தபோது, சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற சதாப்தி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், ஆவடி இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே, அடையாளம் தெரியாத 40 வயது மதிப்புதக்க பெண் ஒருவர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆவடி அருகே தண்டவாளத்தை கடந்த போது, சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.