/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஆக 30, 2024 12:20 AM

பெசன்ட் நகர்,
சென்னையில் புகழ் பெற்ற, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச் 52ம் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது.
சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து, 'நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்' என்ற தலைப்பில், சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. காலை முதல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர். கொடியேற்ற நிகழ்வில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவை, கோவில் பங்கு பேரவை மற்றும் அன்பியங்கள், பங்கு மக்கள் முன்னின்று நடத்தினர். பாதுகாப்பு பணியில், 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மொத்தம், 60 கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப்பட்டு உள்ளன.
இன்று, 'விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே' என்ற தலைப்பில், கூட்டு திருப்பலி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில், திருப்பலி நடக்கிறது. செப்., 7ல் தேர்பவனி மற்றும் 8ல் கொடியிறக்கத்துடன் திருவிழா முடிவடைகிறது.