/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடாவடி ஷேர் ஆட்டோக்கள் அல்லல்படும் விம்கோ நகர்
/
அடாவடி ஷேர் ஆட்டோக்கள் அல்லல்படும் விம்கோ நகர்
ADDED : ஜூலை 01, 2024 01:53 AM

திருவொற்றியூர்:திருவொற்றியூர், விம்கோ நகர் பேருந்து நிறுத்தத்தை, தினமும் 1,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, மெட்ரோ ரயில் நிறுத்தம், மின்சார ரயில் நிறுத்தம் இருப்பதால், பேருந்து போக்குவரத்தும் மிக பிரதானமாக உள்ளது.
இந்நிலையில், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிருக்கு, ஒரு பக்கம் மட்டுமே நிழற்குடை உள்ளது. மற்றொரு புறம் நிழற்குடை கிடையாது. குறிப்பாக, பயணியர் நிற்க வேண்டிய இடம் கூட தெரியாத அளவிற்கு, கடும் நெரிசலாக இருக்கும்.
ஒரு மாநகர பேருந்து வந்து நிற்கும் போது, மற்றொரு பைக் கூட முந்தி செல்ல முடியாத அளவிற்கு, இடம் குறுகலாக இருக்கும் நிலையில், பேருந்துகளுக்கு இடையூறாக, ஷேர் ஆட்டோக்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
பேருந்திற்கு கூட இடம் விடாமல் அடாவடி தனமாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதற்கு தீர்வாக, விம்கோ நகர் பேருந்து நிறுத்தத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பயணியர் வசதிக்காக, நிழற்குடை அமைக்க வேண்டும்.
பிரதானமாக, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களின் அடாவடித்தனத்தை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.