/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் திருடிய பெண் கைது
/
ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் திருடிய பெண் கைது
ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் திருடிய பெண் கைது
ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் திருடிய பெண் கைது
ADDED : நவ 06, 2024 12:46 AM

அமைந்தகரை, அமைந்தகரை, அய்யாவு காலனியைச் சேர்ந்தவர் ராகேஷ், 37. இவர், அதே பகுதியில் உள்ள கோவிந்தன் தெருவில், துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்துகிறார்.
ராகேஷின் அலுவலக அறையில் லாக்கரில் வைக்கப்படும் பணம், சிறுக சிறுக திருடு போவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ராகேஷ், அறையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது, அலுவலகத்தில் துாய்மை பணியாளராக பணிபுரியும், அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்த ரம்ஜான், 47, என்ற பெண் திருடியது தெரிந்தது.
இது குறித்து, 'சிசிடிவி' காட்சி பதிவுகளுடன் ராகேஷ், அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். போலீசார், அப்பெண்ணை பிடித்து விசாரித்ததில், ராகேஷின் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக அவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
ராகேஷின் அறையை சுத்தம் செய்யும் போதேல்லாம், லாக்கரில் இருந்த பணத்தை திருடியது தெரிந்தது. குடும்ப தேவைக்காக, பல மாதங்களாக, 5,000, 10,000 என, சிறுக சிறுக 5 லட்சம் ரூபாய் வரை திருடியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ரம்ஜானை போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.