/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய வாலிபர் கைது
/
ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய வாலிபர் கைது
ADDED : மார் 02, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பிரபு, 40. புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை, புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பு, 'பிளாக் - எப்' அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது, பரத், 22, என்பவர், தன் மாமனாரை தாக்கியுள்ளார். அவரை பிரபு தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த பரத், கத்தியால் பிரபுவை தாக்கி தப்பினார்.
புதுவண்ணாரப்பேட்டை போலீசார் பரத்தை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.