/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது போதையில் வாலிபர் கொலை மது போதையில் தகராறு வாலிபர் குத்தி கொலை
/
மது போதையில் வாலிபர் கொலை மது போதையில் தகராறு வாலிபர் குத்தி கொலை
மது போதையில் வாலிபர் கொலை மது போதையில் தகராறு வாலிபர் குத்தி கொலை
மது போதையில் வாலிபர் கொலை மது போதையில் தகராறு வாலிபர் குத்தி கொலை
ADDED : ஆக 24, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெ.ஜெ.நகர், அம்பத்துார், அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ், 29; தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியர். இவரது நண்பர் பாடிபுதுநகரைச் சேர்ந்த மணிகண்டன், 32.
நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் ஜெ.ஜெ.நகரில் ஒதுக்குப்புறமான இடத்தில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இந்த நிலையில் தான் வைத்திருந்த கத்தியால் காளிதாசை, மணிகண்டன் கழுத்தில் குத்தி தப்பினார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு உயிரிழந்தார்.