ADDED : செப் 24, 2025 12:49 AM
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்று கிலோ மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஏழு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து, திருச்சி செல்லும் விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு எழும்பூர் வந்தது. ஒரு பெட்டியில் பையில், இருந்த 3 கிலோ கஞ்சாவை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய்.
இதேபோல், ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த, 35 கிலோ குட்கா மூட்டையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிலையத்தில், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுப்பட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகம்படும் படி சுற்றி திரிந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், கேரளாவை சேர்ந்த முகமது ஷெனிப், 39, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பூந்தமல்லி சுற்று புறத்தில் விற்றது தெரிந்தது. ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முகமது ஷெனிப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.