சென்னைக்கு 1,000 ‘ஏசி’ மின் பேருந்துகள்: சென்னைக்கு 1,000 ‘ஏசி’ மின் பேருந்துகள்
சென்னைக்கு 1,000 ‘ஏசி’ மின் பேருந்துகள்: சென்னைக்கு 1,000 ‘ஏசி’ மின் பேருந்துகள்
UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 10:56 PM

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, ‘ஏசி’ வசதியுடன் 1,000 மின் பேருந்துகள் வாங்க, 500 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வசதியான பொது போக்குவரத்து சேவையை, சென்னை மக்களுக்கு வழங்கும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக, ‘ஏசி’ வசதி கொண்ட, 1,000 புதிய மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. பேருந்து பணிமனை களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இதற்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக, 755 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில், 355 பேருந்துகள் மட்டுமே குளிர்சாதன வசதி கொண்டவை.
புதிதாக, 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதால், சென்னையின் பொது போக்குவரத்து சேவை நவீனமயமாவதுடன், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும்.
பயணியருக்கு மேம்பட்ட மற்றும் வசதியான போக்குவரத்து சேவை கிடைக்க வழிவகை ஏற்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
