/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது ஒடிசா வாலிபர்கள் இருவரிடம் 101 கிலோ கஞ்சா பறிமுதல்
/
பொது ஒடிசா வாலிபர்கள் இருவரிடம் 101 கிலோ கஞ்சா பறிமுதல்
பொது ஒடிசா வாலிபர்கள் இருவரிடம் 101 கிலோ கஞ்சா பறிமுதல்
பொது ஒடிசா வாலிபர்கள் இருவரிடம் 101 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : செப் 04, 2025 03:33 AM

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று காலை முதல் பெரும்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெரும்பாக்கம், அரசன்கழணி ஏரிக்கரை அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்து, வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
அவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர்கள் இருவரும், ஒடிசாவை சேர்ந்த தனுஷ் ஜெய காரா,34, கமல் லைசன் கிலா,24 என, தெரிய வந்தது.
விசாரணைக்கு பின், இருவரும் மறைத்து வைத்திருந்த மொத்தம் 101 கஞ்சா கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.