நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்,திருமங்கலம், சத்தியசாய் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 49. கொத்தனார் கடந்த, 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன், வேளாங்கண்ணி கோவிக்கு சென்ற செந்தில்குமார், நேற்று அதிகாலை வீடுதிரும்பினார்.
வீட்டிற்குள், பிரோவில் வைத்திருந்த, 11.5 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. புகார்படி திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

