/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு
/
வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு
ADDED : நவ 03, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை: தாம்பரம் அருகே, குரோம்பேட்டை சோழவரம் நகரை சேர்ந்தவர் மணவாளன், 50. தனியார் ஊழியர். இவர், வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு முன், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோ லாக்கரில் இருந்த, 12 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளி பொருட்களை, மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

