/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது
/
கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது
ADDED : நவ 03, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணிமங்கலம்:  கத்தி முனையில் மிரட்டி, இரும்பு கடைக்காரரிடம் பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
தாம்பரம் அருகே மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 57. இவர், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.
நேற்று இங்கு வந்த, காட்டாங்கொளத்துாரை சேர்ந்த ரவுடி ரத்தினசபாபதி, 30, என்பவர், கத்தியை காட்டி மிரட்டி, சுப்பிரமணியிடம் இருந்து, 1,500 ரூபாயை பறித்து சென்றார்.
புகாரின்படி, மணிமங்கலம் போலீசார் ரத்தினசபாபதியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

